வெளிநாடு களிலிருந்து கடத்தல்காரர்கள் தங்கத்தை இந்தியாவிற்குள் கொண்டுவருவதற்கு பல்வேறு யுக்திகளைக் கையாண்டு வருகின்றனர். அதில் பெரும்பாலும் அப்பாவி மக்கள் பயன்படுத்தப்படுகின்றனர். இன் னும் சிலர் இதையே தொழிலாக வைத்துக்கொண்டு வெளிநாடுகளுக்கு அடிக்கடி பறந்து சென்று அங்கிருந்து வரும்போது தங்கத்துடன் வருவார்கள்.

Advertisment

தற்போது மத்திய வருவாய்த்துறையினர், சுங்கவரித்துறையினர், வான் நுண்ணறிவுப் பிரிவு என பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கடத்தல் தங்கங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துவந்தாலும், இன்றும் கடத்தல் குறைந்த பாடில்லை. அதற்குக் காரணம் அடிக்கடி பறந்து சென்று தங்கம் கடத்தி வருபவர்களுக்கும், அதிகாரி களுக்கும் ஒரு சுமுகமான உறவு ஏற்பட்டு நாளடை வில் அந்த அதிகாரி பணியிலிருக்கும் சமயத்தில் இந்தியாவிற்குள் நுழைவதுபோன்று திட்டமிட்டு வருவதால், கடத்தல் தங்கம் மிக சுலபமாக இந்தியாவிற்குள் கொண்டுவரப்படுகிறது என் கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

அதேசமயம் வெளிநாடுகளில் வேலைக்குச் சென்றுவிட்டு சொந்த ஊர் திரும்பும் பயணிகளையும் கடத்தல்காரர்கள் விட்டுவைப்ப தில்லை. அந்த பயணிகள் மூலம் தங்கத்தைக் கொடுத்தனுப்பிவிடு வார்கள். ஆனால் விமான நிலைய சோதனையில் அவர்கள் பிடிபட்டு தங்கத்தை பறிகொடுக்கும் நிலை ஏற்பட்டு விடு கிறது. இதில் பல பயணிகள் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் குழப்பத்தில் இருப்பார்கள்.

இதெல்லாம் ஒருபுறமிருக்க சமீபத்தில் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு மலேசியாவில் இருந்து வந்த ஒரு பயணியின் மனைவி தன்னுடைய கணவருக்கு நேர்ந்த கொடுமையை விளக்கி ஒரு வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார்.

Advertisment

கடந்த 16-ஆம் தேதி மலேசியாவை சேர்ந்த ஒருவர் திருச்சி விமான நிலையத்தில் தன்னுடைய தொழில்நிமித்தமாக வந்துள்ளார். அவர் திருச்சிக்கு வந்தபோது, அவரை பரிசோதித்த வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் அவர் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிமுதல் செய்து, அது 55 கிராம் இருந்ததனால் இதற்கு வரி செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

dd

ஆனால் அந்த பயணி, “அவர் தன்னுடைய சொந்தப் பயன் பாட்டிற்காக கழுத்தில் அணிந் துள்ளது. நான் கடத்திக் கொண்டு வரவில்லை என்று கூறியுள்ளார். இருப்பினும் அவரிடமிருந்து செயினை வாங்கிக்கொண்டு வரி கட்டினால்தான் செயினைக் கொடுப்போம் என கூறியுள்ளனர். "சரி, நாளை கட்டுகிறேன். ஆனால் நான் மலேசிய தூதரக அதிகாரி களிடம் இதுகுறித்துப் பேசவேண்டும்' என்றுசொல்லி, மறுநாள் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு எம்பசியில் இருந்துவந்த அதிகாரிகள் என்று இரண்டு இந்தியர்களைக் காட்டியுள்ளனர். அவர்கள் மலேசியாவைச் சேர்ந்தவர்கள் இல்லை. அவர்களும் உரிய வரியை செலுத்திவிட்டுச் செல்லுங்கள் என்று கூறியுள்ளனர். பின்னர் அதற்கு உரிய வரி 1 லட்சத்திற்கும் அதிகமான தொகை யைச் செலுத்திவிட்டு சென்றிருக்கிறார். இதுதொடர்பாக அவரது மனைவி இணையதளத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார்.

அந்த நிகழ்வு குறித்து சம்பந்தப்பட்ட சுங்கவரித்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, "அவரிடம் இப்படி கட்டாயப்படுத்தி செயினைப் வாங்கி வைத்தது குற்றம்தான். பலர் வெளிநாடுகளுக்குச் சென்று கஷ்டப்பட்டு சம்பாதித்து நகை வாங்கி வருகிறார்கள். நாங்கள் அவர்களை பெரும்பாலும் அனுமதித்துவிடுவோம். ஆனால் சிலர் அந்த நகையை வெளிநாட்டிலிருந்து வரும்போது யாரிடமாவது வாங்கி வந்து அதை இங்குள்ளவர்களிடம் கொடுப்பது, அதேபோல் நகைகளை விமான நிலையத்திற்கு வெளியே வந்தவுடன் விற்பனை செய்வது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதால், இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்திய அரசாங்கத்தின் விதிமுறைப்படி, முன்பு ஆண் 20 கிராம் தங்கமும் பெண் 40 கிராம் தங்கமும் கொண்டுவரலாம் என்றி ருந்தது. அதை மாற்றி தற்போது, ccவெளிநாட்டிலிருந்து வரும் ஒரு ஆண் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கமும், பெண் 1 லட்சம் மதிப்பிலான தங்கமும் கொண்டுவரலாம் என்பது நடை முறையில் உள்ளது. இந்த விதிமுறைப்படி பார்த்தால் அதிகாரி கள் எடுத்த நடவடிக்கை சரிதான், ஆனால் மனிதாபிமான அடிப்படையில் பார்த்தால் தவறு''’என்று கூறினார்.

சாமானிய பயணிகளின் சிந்தனையோ வேறுவிதமாக உள்ளது. "வேலைவாய்ப்பு தேடி வெளிநாடுகளுக்குச் சென்று உழைத்து சிறுகச் சிறுக சேமித்து அதில் நகையாக வாங்கிக் கொண்டு வரும் பல கூலித்தொழிலாளர்கள் இந்தியாவிற்குள் வரும்போது அதிகாரிகளின் சோதனை என்ற பெயரில் தன்னி டம் உள்ள சொற்பமான நகைகளுக்கு பெருமளவிலான வரி செலுத்திவிட்டு ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் நிலை உள்ளது. அதேசமயத்தில் வெளிநாட்டிலிருந்து தங்கத்தை கடத்தி வரு பவர்களுக்கு அதிகாரிகள் சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்கின்றனர்.

எல்லா அதிகாரிகளுக்கும் கடத்தல்காரர்கள் யார் என்பது நன்றாகத் தெரியும். ஆனால் அவர்களை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இத்தனை சோதனைகள் நடைபெறும் என்பதை அறிந்தும் கடத்தல்காரர்கள் ஏன் மறுபடியும் கடத்தல் செயல்களில் ஈடுபடவேண்டும். அதில் ஏதோ ஒரு ஓட்டை இருப்பதுதான் காரணம். எனவே அதிகாரிகள் இப்படி சாமானியர்களையும், கூலித் தொழிலாளர்களின் உழைப்பையும் சுரண்டுவதற்கு பதில் கடத்தல்காரர்களிடமிருந்து தேசத்தைப் பாதுகாக்க முன்வரவேண்டும்' என்கின்றனர்.